மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக திருவாரூர் அஞ்சலகம் முன்பு மக்கள் அரசு கட்சியின் மாவட்ட செயலாளர் இளையராஜா தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் சங்கு ஊதிக்கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், மத்தியில் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக சங்கு ஊதிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.