ETV Bharat / state

"அலுவலக கட்டடத்தை நீங்க சரி செய்றீங்களா, நான் செஞ்சிக்கவா" - காட்டமான திமுக எம்எல்ஏ!

author img

By

Published : Nov 13, 2019, 5:30 PM IST

திருவாரூர்: மன்னார்குடி சட்டமன்ற அலுவலகக் கட்டடம் சேதமடைந்து விழுந்ததையடுத்து, சீரமைக்காத அலுவலர்களைச் சந்தித்துத் தானே சீரமைத்துக் கொள்வதாகவும்; அதற்கான அனுமதியை மட்டும் வழங்குமாறும் திமுக சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி ராஜா வேண்டுகோள் விடுத்தார்.

மன்னார்குடி சட்டமன்ற அலுவலக கட்டிடம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பாலகிருஷ்ணா நகரில் சட்டமன்ற அலுவலகக் கட்டடம் உள்ளது. இங்கு திமுக சட்டமன்ற உறுப்பினராக டி.ஆர்.பி ராஜா கடந்த 2011ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து, தற்போது வரை இருந்து வருகிறார்.

இந்நிலையில், மன்னார்குடி சட்டமன்ற அலுவலகக் கட்டடத்தின் மேற்பகுதி திடீரென்று சேதமடைந்து விழுந்ததால் அலுவலக ஊழியர்கள், நிர்வாகிகள் அலறியடித்து வெளியே ஓடி வந்தார்கள். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்ற டி.ஆர்.பி ராஜா, அலுவலகத்தைப் பார்வையிட்டார்.

பின்னர், பொதுப்பணித்துறை அலுவலகத்திற்குச் சென்று உதவி செயற்பொறியாளர் சிங்காரத்திடம் பேசிய அவர், 'முதன்முறையாக 2011ஆம் ஆண்டு பதவிக்கு வந்த காலத்திலிருந்தே சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்தும் அல்லது வேறு எந்த நிதியிலிருந்தும் கட்டடத்தைப் பராமரிக்காமல், என்னுடைய சொந்த செலவிலேயே தான் பராமரித்து வந்துள்ளதாகவும், கஜா புயலில் சேதமான கட்டடம் தற்போது பெயர்ந்து விழுந்து கொண்டிருக்கிறது. இது அரசுக்குச் சொந்தமான கட்டடம் என்பதால் பொதுப்பணித்துறை தான் பராமரித்துத் தரவேண்டும். இல்லையெனில், கட்டடத்தைத் தானே சொந்தமாகப் பராமரித்துக் கொள்கிறேன். அதற்கான அனுமதியை மட்டும் தருமாறு' கேட்டுக் கொண்டார்.

மன்னார்குடி சட்டமன்ற அலுவலகக் கட்டடம்

இதற்குப் பதிலளித்த அலுவலர்கள், 'இன்னும் 10 நாட்களில் கட்டடத்தை நாங்களே சரி செய்து தருகிறோம்' எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கழிவுநீர் தொட்டி உயிரிழப்பு விவகாரம் நிர்வாகம் மீது வழக்குப் பதிவு!

Intro:Body:மன்னார்குடி சட்டமன்ற அலுவலக கட்டிடம் பெயர்ந்து விழுந்ததையடுத்து சீரமைக்காத அதிகாரிகளை சந்தித்து தானே சீரமைத்து கொள்வதாகவும் அதற்கான அனுமதியை மட்டும் வழங்குமாறு கோரிய டி.ஆர்.பி ராஜா

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பாலகிருஷ்ணா நகரில் சட்டமன்ற அலுவலக கட்டிடம் உள்ளது. திமுக சட்டமன்ற உறுப்பினராக டி.ஆர்.பி ராஜா கடந்த 2011 முதல் தொடர்ந்து தற்போது வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இந்நிலையில் மன்னார்குடி சட்டமன்ற அலுவலக கட்டிடத்தின் மேற்பகுதி திடிரென பெயர்ந்து விழுந்ததால் அலுவலகத்தில் உள்ள அலுவலக ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகள் அலறியடித்து வெளியில் வந்துள்ளார்கள். உடனடியாக சட்டமன்ற உறுப்பினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த டி.ஆர்.பி.ராஜா அலுவலகத்தினை பார்வையிட்டார். அதனை தொடர்ந்து பொதுப்பணித்துறை அலுவலத்திற்கு சென்று உதவி செயற்பொறியாளர் சிங்காரத்திடம்,
பேசிய அவர்,
தான் முதன்முறையாக 2011-ல் பதவிக்கு வந்த காலத்தில் இருந்தே சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்தும் அல்லது வேறு எந்த நிதியிலிருந்தும் கட்டிடத்தை பராமரிக்காமல் தனது சொந்த செலவிலேயே பராமரித்து வந்துள்ளதாகவும், கஜா புயலில் சேதமாக கட்டிடம் தற்போது பெயர்ந்து விழுந்து கொண்டிருக்கிறது இது அரசுக்கு சொந்தமான கட்டிடம் பொதுபணித்துறை பராமாித்து தரவேண்டும். இல்லையெனில் கட்டிடத்தை தானே சொந்தமாக பராமரித்து கொள்கிறேன் அதற்கான அனுமதியை தருமாரு கேட்டதற்கு அதிகாரிகள் இன்னும் 10 நாட்களில் கட்டிடத்தை சரி செய்து தருவதாக தெரிவித்துள்ளனர்.
Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.