திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், டி.என்.சி.எஸ், ஊழியர்களுக்கு இணையான ஊதியம், தனித்துறை பணிவரன் முறை, ஓய்வு ஊதியம், உணவுப் பொருட்களை எடை வைத்து கணக்கீட்டு நியாயவிலைக் கடைகளுக்கு வழங்குதல், மண்ணெண்ணெய் அளவை குறைக்காமல் வழங்க வேண்டும்.
மேலும், நியாயவிலைக்கடை கடைகளில் கழிவறை, அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தினர். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் குணசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.