திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள குருங்குளம் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் அனைத்தும் பழுதடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அவற்றைச் சரி செய்து கொடுக்குமாறு பல முறை வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்துள்ளனர்.
இதனையொட்டி அப்பகுதி மக்கள் சட்டப்பேரவை தேர்தலைப் புறக்கணித்து தங்களுடைய ஒவ்வொரு வீட்டின் முன்பாகவும் கருப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும் சுமார் 150க்கும் மேற்பட்ட இந்திரா நகர் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டாலும் தற்போது வரை அரசு அலுவலர்கள் தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வரவில்லை என்று கூறியுள்ளனர்.
தொடர்ந்து இந்த தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக வருபவர் யாராக இருந்தாலும் தங்களுடைய அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி அடிப்படை வசதிகளைச் செய்து கொடுப்பார்கள் என உத்தரவாதம் கொடுத்தால் மட்டுமே வாக்களிப்போம் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: திருவாரூரில் ரூ.2 கோடி பறிமுதல்!