ETV Bharat / state

பஞ்சரத்ன கீர்த்தனைகளை இசைத்து இசையஞ்சலி - music

திருவாரூர்: சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தியை முன்னிட்டு நடத்தப்பட்ட பஞ்சரத்ன கீர்த்தனை இசை நிகழ்ச்சியை தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்.

இசை திருவிழா
author img

By

Published : May 11, 2019, 3:03 PM IST

Updated : May 11, 2019, 3:30 PM IST

திருவாரூரில் பிறந்த சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகளின் ஜெயந்தி விழா ஆண்டுதோறும் மே மாதம் நடத்தப்படுவது வழக்கம். சுமார் ஆறு நாட்கள் நடைபெறும் இந்த விழா, மே 6ஆம் தேதி தொடங்கப்பட்டது.

music
வயலின் இசை

இந்த விழாவின் இறுதி நாளான இன்று, பிரசித்திப்பெற்ற தியாகராஜர் கோயிலில் நடைபெற்ற பஞ்சரத்ன கீர்த்தனை இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கிவைத்தார்.

music
இசை நிகழ்ச்சில் பங்கேற்ற பிரபல பாடகி

விழாவின் இறுதியில், சிறப்பாக பங்கேற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந்த விழாவில் சுமார் 300-க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் பங்கேற்று பஞ்சரத்தின கீர்த்தனைகளைப் பாடி, சங்கீத மும்மூர்த்திகளுக்கு இசை அஞ்சலி செலுத்தினர்.

பஞ்சரத்ன கீர்த்தனை இசை நிகழ்ச்சி

Intro:திருவாரூரில் பிறந்த சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி விழாவையொட்டி பஞ்சரத்ன கீர்த்தனை இசை நிகழ்ச்சியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

Body:திருவாரூரில் பிறந்த சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி விழாவையொட்டி பஞ்சரத்ன கீர்த்தனை இசை நிகழ்ச்சியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். திருவாரூரில் அவதரித்த கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளான ஸ்ரீ தியாக பிரம்மம் 252 வது ஜெயந்தி விழா, ஸ்ரீ முத்துசாமி தீட்சதர், ஸ்ரீ சியாமா சாஸ்திரிகள் ஆகியோரின் ஜெயந்தி விழாவையொட்டி ஆண்டுதோறும் இசை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக திருவாரூரில் சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி விழாவை முன்னிட்டு இசை நிகழ்ச்சி கடந்த 6ஆம் தேதி தொடங்கியது. இறுதி நாளான இன்று தியாகராஜர் கோவிலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்துகொண்டு பஞ்சரத்தின கீர்த்தனை நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து சிறந்த இசை கலைஞர்களுக்கு பரிசு சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார். இந்நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் பங்கேற்று பஞ்சரத்தின கீர்த்தனை பாடி சங்கீத மும்மூர்த்திகளுக்கு இசை அஞ்சலி செலுத்தினர்.

Conclusion:
Last Updated : May 11, 2019, 3:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.