நாடு முழுவதும் கரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.
காவலர்கள், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் எனப் பலரும் தங்கள் பங்கிற்கு கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்திவருகின்றனர்.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த இளங்கலை உயிரி தொழில்நுட்பவியல் மாணவியான காவ்யா தனது தந்தையுடன் இணைந்து கரோனா விழிப்புணர்வுப் பாடலை பாடியுள்ளார். நாட்டுப்புற பாடகரான இவரது தந்தை நேருதாசன் பாடல்களை எழுத, காவ்யா பாடலைப் பாடியுள்ளார்.
இதையும் படிங்க: கட்டுக்கடங்காத கரோனா... வீதி உலாவந்த எமதர்மன்: பொதுமக்களே உஷார்!