ஸ்ரீ தியாகராஜர் சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் சந்திரசேகர்பெருமாள் முன்னிலையில் கொடியேற்றம் நடைபெற்றது.
இந்நிகழச்சி நிறைவு பெற்று சுவாமிக்கு சிறப்பு ஆராதனைகளுடன் சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாள்தோறும் சுவாமி புறப்பாடு பெரியகோயிலின் நான்கு ராஜ வீதிகளில் வெகு சிறப்பாக நடைபெறும். முக்கியமான நிகழ்வான ஸ்ரீ தியாகராஜசுவாமி வலது பாததரிசனம் ஏப்ரல் 6ந் தேதியும் உலகப் புகழ்பெற்ற ஆழித்தேரோட்ட திருவிழா மே 4-ம் தேதியும் வெகு விமர்சையாக நடைபெறும்.
இந்த பங்குனி உத்திரத் திருவிழாவினைக் கண்டு சுவாமியின் அருள்பெற வெளிமாநிலம், வெளிமாவட்டகளிலிருந்து ஆயிரக்கணக்கான பத்தர்கள் வருகை தருவர்.