ETV Bharat / state

திருவாரூரில் இறந்தவர்களின் உடலை சுமந்து செல்லும் அவலம்: சுடுகாட்டிற்கு சாலைகோரும் கிராம மக்கள்! - Thiruvarur news in Tamil

திருவாரூர்: நன்னிலம் அருகே அகர திருமாளத்தில் இறந்தவர்களின் உடலை சுமந்து செல்லும் அவலம் உள்ளதால், புதிய தார்சாலை அமைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இறந்தவர்களின் உடலை அவலம்: சுடுகாட்டிற்கு சாலைக்கோரும் கிராம மக்கள்!

author img

By

Published : Jan 3, 2021, 12:46 PM IST

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே அகர திருமாளத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பல ஆண்டுகளுக்கும் மேலாக கிராம மக்களுக்கு மயான கொட்டகைக்கு செல்வதற்கு முறையான சாலை வசதி அமைத்து கொடுக்காததால், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நிதி திரட்டி தங்கள் செந்த பணத்தில் மண் சாலை அமைத்து அதனை பயன்படுத்தி வந்தனர்.

தற்போது இந்த மண் சாலையானது தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் இறந்தவர்களின் உடலை தூக்கிச் செல்வதற்கு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும், சில நேரங்களில் தடுமாறி வாய்க்காலில் விழுந்து விடுவதாகவும் கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இறந்தவர்களின் உடலை அவலம்: சுடுகாட்டிற்கு சாலைக்கோரும் கிராம மக்கள்!

இது குறித்து பலமுறை வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர், அமைச்சர், முதலமைச்சரின் தனிப்பிரிவு அலுவலகம் வரை மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் தமிழ்நாடு அரசு கிராம மக்களின் நலனை கவனத்தில் கொண்டு மயான கொட்டகைக்கு செல்வதற்கு ஒரு தரமான தார்சாலை அமைத்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க...அரசு அலுவலர்களின் அலட்சியத்தால் 5 வருடங்களாக அலைகழிக்கப்படும் குடும்பம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.