ETV Bharat / state

குளிர்பானத்தில் மயக்க மருந்து - சிறுமியை வன்புணர்வு செய்த வழக்கில் இரண்டாவது நபர் கைது!

author img

By

Published : Mar 14, 2020, 12:59 PM IST

திருவாரூர்: 16 வயது சிறுமியை மூன்று இளைஞர்கள் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட விவகாரத்தில் இரண்டாவது நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

rape
rape

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள குன்னூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜான்சன். இவரது வீட்டிற்கு கார்த்திக் என்ற இளைஞர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். இதன் காரணமாக, ஜான்சன் வீட்டிற்கு எதிர் வீட்டில் குடியிருக்கும் 16 வயது சிறுமியுடன் கார்த்திக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

திருமணம் செய்து கொள்வதாக சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கார்த்திக் சிறுமியிடம் பழகிவந்துள்ளார். பின்னர் ஒருநாள் அச்சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துகொடுத்து, பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார். இதனைத் தெரிந்துகொண்ட ஜான்சனின் நண்பர்களான கார்த்திக், விஸ்வராஜ் ஆகிய இருவரும் சிறுமியைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டி, இவர்கள் மூன்று பேரும் தொடர்ந்து நான்கு மாத காலமாக, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துகொடுத்து அச்சிறுமியை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.

gang Rape case
கைதான விஸ்வராஜ்.

இந்நிலையில், சிறுமிக்கு உடல் நிலை மிகவும் மோசம் அடைந்ததையடுத்து, அவரது பெற்றோர் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். சிறுமியின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகக்கூறி, திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு, மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்தபோது, தனக்கு நேர்ந்த இந்தக் கொடுமையை தன் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சிறுமி அளித்த புகாரின் பேரில் திருத்துறைபூண்டி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் கார்த்திக்கை நேற்று காலை கைது செய்தனர். இந்த நிலையில் பாலியல் வன்கொடுமை குற்ற வழக்கில் மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள விஸ்வராஜ் இன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவான ஜான்சனை தேடி வருகின்றனர்.

இந்த மூன்று நபர்கள் மீதும் கூட்டு பாலியல் வன்கொடுமை சட்டம், சிறுமியை ஏமாற்றுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதையும் வாசிங்க: வெட்டாற்றில் மாயமான மாணவனை தேடும் பணி தீவிரம்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.