திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே உள்ள மழையூர் கிராமத்தைச் சேர்ந்த 211 விவசாயிகள் கடந்த 2018-19ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு பிரீமியம் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு தலா 500 ரூபாய் செலுத்தியுள்ளனர்.
ஆனால், ஒரு விவசாயிக்கு ரூ.227 என்ற அடிப்படையில் மட்டுமே இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மற்ற கிராமங்களுக்கு 67% பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், மழையூர் கிராமத்துக்கு மட்டும் 0.87% மட்டுமே இழப்பீடுத் தொகை கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியரை சந்தித்த விவசாயிகள், குறுவை சாகுபடி தொடங்கியுள்ளதால், பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையை சற்று உயர்த்தி வழங்கினால், சாகுபடியைத் தொடங்க உதவியாக இருக்கும் எனக் கோரிக்கை மனு அளித்தனர்.