ETV Bharat / state

திருவாரூரில் முதலமைச்சரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

திருவாரூர்: காவேரி உபரிநீர்த் திட்டத்தைக் கைவிடக்கோரி தமிழ்நாடு முதலமைச்சரைக் கண்டித்து இன்று (ஆக. 28) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாகத் தமிழ்நாடு விவசாய சங்கம் அறிவித்துள்ளது.

farmers
farmers
author img

By

Published : Aug 28, 2020, 6:54 AM IST

தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட குழு அவசரக் கூட்டம் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் நடைபெற்றது.

இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சிவபுண்ணியம், விவசாய சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் காவிரி உபரிநீர்த் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வரும் 28ஆம் தேதி ஒன்றிய நகரங்களில் கறுப்புக்கொடி காட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

thiruvarur farmers announced protest against tn cm on tomorrow
திருவாரூரில் முதலமைச்சரைக் கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் துணைச் செயலாளர் பி.எஸ். மாசிலாமணி, "திருவாரூர் மாவட்டம் வேளாண் பிரச்னை கொந்தளிப்பில் இருக்கிறது, மேட்டூரிலிருந்து உபரிநீர்த் திட்டம் என்ற பெயரில் சேலத்தில் நூறு ஏரிகளுக்கு மேல் தூர்வாரப்பட்டு தண்ணீர் கொண்டுசெல்லும் நீரேற்றும் கால்வாய் திட்டம் என்ற பெயரில் ராட்சத மோட்டார்களைக் கொண்டு தனிப்பட்ட விவசாயிகளின் தண்ணீரைக் களவாடும் விவசாயிகள் எதிர்ப்பால் கிடப்பில் கிடந்த சரபங்கா மேட்டூர் திட்டத்தை சொந்த சுய அரசியல் லாபத்திற்காக அடுத்த மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமல்படுத்துவதை இந்தக் கூட்டம் மூலம் கண்டிக்கின்றோம்.

இத்திட்டம் அமலாக்கப்பட்டால் சேலத்திற்கும் காவிரி டெல்டாவிற்கும் மீண்டும் ஒரு பெரிய தீர்ப்பாயம் (டிரிப்யூனல்) அமைக்கப்பட வேண்டி வரலாம். இதனைத் தனிப்பட்ட முறையில் விருப்பத்தின் அடிப்படையில் செயல்படுத்திவருகின்ற முதலமைச்சர் பழனிசாமியை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

நாளை (ஆக.27) திருவாரூரில் நடைபெற உள்ள ஆய்வுக்கூடத்தில் இந்தத் திட்டம் கைவிடப்படுகிறது என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும், காவிரி உபரிநீர்த் திட்டத்தைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட வேளாண் பிரச்னைகளை வலியுறுத்துவோம் என்ற காரணத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு விவசாய சங்கங்கள் போன்ற சில அமைப்புகளை அனுமதிக்காமல் சந்திக்க மறுத்து, காவிரி காப்பாளன் விருது கொடுத்த சங்கங்களை மட்டும் அழைத்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முளைவிட்ட நெல் மூட்டைகள் : விவசாயிகள் வேதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.