திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் அண்டகுடி கிராமத்தில் நேற்று கைலாசம் என்பவர் மகன்கள் இளையராஜா (27) சகோதரர் இளவரசன் (25) ஆகிய இருவரும் உறவினர் பாரி (26) என்பவரின் உதவியோடு தங்களது வீட்டின் கூரையை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
மழைக்காலம் என்பதால் மேற்கூரையில் இருந்த தகரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டபோது எதிர்பாரத விதமாக வீட்டு மின்இணைப்பின் வயர்மீது தகரம் பட்டதில் அவர்கள் மீது மின்சாரம் பாய்ந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உடற்கூறாய்விற்கு பிறகு மூவரது உடலும் இறுதி அஞ்சலி செலுத்த அண்டகுடி கிராமத்தில் உள்ள அவர்களது இல்லத்தில் வைக்கப்பட்டது. மூன்றுபேர் இறப்பு குறித்து அறிந்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதுடன் அவர்களின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
இதையும் படியுங்க: பயணிகளின் உயிரைக் காத்த அரசுப் பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு!