தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக 13 தொகுதிகளிலும், அதிமுக 9 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.
இதில் திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட பூண்டி கலைவாணன் 64 ஆயிரத்து 751 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் தனது வெற்றிக்கு காரணமாக விளங்கிய திருவாரூர் அருகே வடகண்டம், திருக்கண்ணமங்கை, காட்டூர், நங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு நன்றியை தெரிவித்தார்.
மேலும் அப்பகுதி மக்கள், பூண்டி கலைவாணனுக்கு பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பதிலுக்கு அவர் வாக்காளர்களுக்கும் சால்வை அணிவித்து தனது நன்றியை தெரிவித்தார்.