திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தின் புதிய கட்டடத்தை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி கலைமதி திறந்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து அவர் வழக்குகளையும் துவக்கி வைத்தார் . இதில் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி விஜயகுமார், குடும்பநல நீதிமன்ற நீதிபதி பக்கிரிசாமி , சார்பு நீதிமன்ற நீதிபதி பிரேமாவதி உள்பட வழக்கறிஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் திருவாரூர் மாவட்டத்திலேயே மன்னார்குடி பகுதியில் தான் குடும்ப பிரச்சனைகள் அதிகமாக உள்ளதாகவும், அதனால் தான் குடும்பநல நீதிமன்றத்தை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் இங்கு கொண்டு வந்துள்ளதாகவும், வழக்குகள் விரைந்து முடிக்க எளிதாகவும் இருக்கும் எனவும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: