ETV Bharat / bharat

ரயில் பயணிகளுக்கு நல்ல செய்தி...ரயில்களில் வரும் டிசம்பருக்குள் 1000 பொதுப்பெட்டிகள் இணைப்பு! - ADDING GENERAL COACHES

ரயில்களில் ஏசி வசதி கொண்ட பெட்டிகளை இணைப்பதை விடவும், பொதுப்பெட்டிகளை கூடுதலாக இணைப்பதில் ரயில்வே கவனம் செலுத்தி வருவதாக மக்களவையில் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் (Image credits-IANS)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 4, 2024, 3:56 PM IST

புதுடெல்லி: ரயில்களில் ஏசி வசதி கொண்ட ஏசி1, ஏசி2 அல்லது ஏசி3 வகுப்பு பெட்டிகளை இணைப்பதற்கு பதில் வரும் டிசம்பர் மாதத்துக்குள் 1000 பொதுப்பெட்டிகள் ரயில்களில் இணைக்கப்பட உள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் தெரிவித்துள்ளார்.

கேள்வி நேரத்தின் போது ரயில்வே துறை தொடர்பாக எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த அஸ்வினி வைஷ்ணவ், ஏழைகளின் நலனுக்காகவே பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அதன் படி இன்றைக்கு ரயில்களில் பொதுப்பெட்டிகளை அதிகரி்கக முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாதம் இறுதிக்குள் 1000 பொதுப்பெட்டிகள் வெவ்வேறு ரயில்களில் இணைக்கப்பட உள்ளன.

மேலும் 10,000 பொதுப்பெட்டிகளை கூடுதலாக தயாரிக்கவும் சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதே நேரத்தில் ஏசி முதல்வகுப்பு, இரண்டாம் வகுப்பு அல்லது ஏசி மூன்றாம் வகுப்பு பெட்டிகள் இணைப்பது அதிகரிக்கப்படமாட்டாது. மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள 1300 ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. உலகின் மிகப்பெரி கட்டமைப்பாக திகழும் ரயில் நிலையங்கள் அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டம் என்ற திட்டத்தின் கீழ் புதுபபிக்கப்பட உள்ளன.

இதையும் படிங்க: "உடுத்திருக்கும் உடையைத் தவிர வேறு ஏதும் இல்லை" வெள்ளம் வடிந்த பின்னும் வடியாத கண்ணீர்

இந்த திட்டத்தின் கீழ் பெரும்பாலான ரயில் நிலையங்கள் ரூ.700-800 கோடி வரை செலவிடப்பட்டு மறுசீரமைக்கப்படுகின்றன. சில ரயில் நிலையங்கள் ரூ.100-200 கோடி செலவில் மறுசீரமைக்கப்படுகின்றன. இநத திட்டம் முடிவடைந்ததும், இவை மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும். ரயில்வே துறை கட்டமைப்பு முழுவதையும் குறிபபாக ரயில் நிலையங்களையும் நவீன மயமாக்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். தமிழ்நாடு, கேரள மாநிலங்களின் எம்பிக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த அஸ்வினி வைஷ்ணவ், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் நிலம் கையகப்படுத்தப்பட்டு திட்டம் செயல்படுத்தப்படும்,"என்றார்.

நாடு முழுவதும் வந்தேபாரத் ரயில்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளன. அதே போல ரயில்களில் பொதுப்பெட்டிகள் குறைக்கப்பட்டு ஏசி வசதி கொண்ட பெட்டிகளும் அதிக அளவில் இணைக்கப்பட்டுள்ளன. எனவே பொதுப்பெட்டிகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக இப்போது மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.