ETV Bharat / state

இரட்டை இலை சின்னம் வழக்கு: பன்னீர்செல்வம் தரப்பிடமும் கருத்து கேட்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு!

நிலுவை வழக்குகள் முடிவுக்கு வரும்வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்த விண்ணப்பம் மீது பன்னீர்செல்வம் தரப்பிடமும் கருத்து கேட்டு தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம், இரட்டை இலை சின்னம்
சென்னை உயர் நீதிமன்றம், இரட்டை இலை சின்னம் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 10 hours ago

சென்னை: நிலுவை வழக்குகள் முடிவுக்கு வரும்வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்த விண்ணப்பம் மீது பன்னீர்செல்வம் தரப்பிடமும் கருத்து கேட்டு தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், "அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடர்பாகவும், கட்சி சட்ட திட்டங்களுக்கு விரோதமாக செயல்பட்டது தொடர்பாகவும் தேர்தல் ஆணையத்துக்கு 2017 முதல் 2022ம் ஆண்டு வரை புகார்கள் அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதில் உள்கட்சி விவகாரம் உள்ளிட்ட பிரச்னை தொடர்பாக தாக்கல் செய்திருக்கும் உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும்வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு அளித்த மனுவுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை எனவே தனது மனு மீது விசாரணை நடத்த, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என்று தமது மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையும் படிங்க: மாஞ்சோலை எஸ்டேட் விவகாரம்: தமிழக அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இந்த மனு, நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால், “சூர்ய மூர்த்தியின் மனு தொடர்பாக அதிமுகவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு பதில் கிடைக்கப்பெற்றது. இதுகுறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

பன்னீர்செல்வம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், “இந்த விவகாரத்தில் தங்கள் தரப்புக்கு நோட்டீஸ் அளிக்கப்படவில்லை. தங்களது தரப்பையும் கேட்ட பின்னரே முடிவெடுக்க உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

இதனையடுத்து, "சூர்யமூர்த்தியின் மனு குறித்து தேர்தல் ஆணையம் நான்கு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும். பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்க வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.