ETV Bharat / lifestyle

இனி டீ போட்டா ஒரு முறை இப்படி போடுங்க..டீ கடை டீ ரகசியம் இதான்! - TEA RECIPE IN TAMIL

டீ போடுவதற்கு என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருந்தாலும், அடுத்த முறை டீ போடும் போது கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ்களை பின்பற்றி ட்ரை பண்ணி பாருங்கள்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Pexels)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : Dec 4, 2024, 4:12 PM IST

டீ போடுவதெல்லாம் ஒரு விஷயமா? பாலில் டீ தூள் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டினால் டீ ரெடி என பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அனால், அது தான் இல்லை. எப்படி ஒவ்வொரு சமையலுக்கும் ஒரு பக்குவம் இருக்கிறதோ, அதே போl டீ போடுவதற்கு என ஒரு பக்குவம் இருக்கிறது. டீ போடும் போது, வெறும் டீ தூள் மட்டும் சேர்க்காமல், அதனுடன் சில பொருட்களை சேர்த்தால் அச்சு அசலாக டீ கடையில் குடிப்பது போல வீட்டில் டீ போடலாம். அது எப்படி? என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம் வாங்க..

தேவையான பொருட்கள்:

  • பால் - 1 டம்ளர்
  • தண்ணீர் - 1 டம்ளர்
  • டீ தூள் - 1 டீஸ்பூன்
  • ஏலக்காய் - 2
  • இஞ்சி - 1 சின்ன துண்டு
  • சர்க்கரை - தேவையான அளவு

டீ போடுவது எப்படி?:

  • அடுப்பில், பால் பாத்திரத்தை வைத்து பால் ஊற்றி காய்ச்சி தனியாக எடுத்து வையுங்கள்.
  • இதற்கிடையில், ஏலக்காய் மற்றும் நறுக்கி வைத்த இஞ்சை நன்கு இடித்து வைக்கவும். இப்போது, டீ டிகாஷன் செய்வதற்கு, அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தண்ணீர், டீ தூள், இடித்து வைத்துள்ள ஏலக்காய் இஞ்சி, சர்க்கரை சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடங்களுக்கு கொதிக்க விடுங்கள்.
  • இப்போது, நாம் காய்ச்சி வைத்த பாலை டிகாஷனுடன் சேர்த்து 2 நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து அடுப்பை அணைத்து வடிகட்டினால், சுவையான டீ ரெடி. அடுத்தமுறை டீ போடும் போது மறக்காமல் இப்படி போட்டுப் பாருங்கள்.

இதையும் படிங்க:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.