ETV Bharat / state

களைகட்டிய விளையாட்டுப் போட்டிகள்- ஆர்ப்பரித்த மக்கள்

திருவாரூர்: காணும் பொங்கலை முன்னிட்டு ஆரூரான் விளையாட்டுக் கழகம் சார்பில் 37ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

thiruvarur
thiruvarur
author img

By

Published : Jan 18, 2020, 12:17 PM IST

தமிழ்நாடு முழுவதும் நேற்று காணும் பொங்கல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக திருவாரூரில் ஆரூரான் விளையாட்டுக் கழகம் சார்பில் 37ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

இதில், காலை முதலே கோலப்போட்டி, ஓட்டப்பந்தயம், சைக்கிள் போட்டி, நீச்சல் போட்டி, குதிரை ரேக்ளா ரேஸ்கள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் பெண்கள், சிறியவர், இளைஞர்கள் என அனைவரும் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்

ஆரூரான் விளையாட்டு கழகம் சார்பில் 37ஆம் ஆண்டு விளையாட்டு போட்டிகள்

இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், கடந்த 4 ஆண்டுகளுக்குப் பிறகு குதிரைப்பந்தயம் இடம்பெற்ற காரணத்தினால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதையும் படிங்க: சொன்னதை செய்த ஸ்டாலின் - நன்றி தெரிவித்த வில்சன் குடும்பத்தினர்

Intro:

Body:திருவாரூரில் காணும் பொங்கலை முன்னிட்டு ஆரூரான் விளையாட்டு கழகம் சார்பில் 37ஆம் ஆண்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கண்டு மகிழ்ந்தனர்.

தமிழகம் முழுவதும் இன்று காணும் பொங்கல் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவாரூரில் ஆரூரான் விளையாட்டுக் கழகம் சார்பில் 37ஆம் ஆண்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. காலை முதல் கோலப்போட்டி,ஓட்டப்பந்தயம்,சைக்கிள் போட்டி, நீச்சல் போட்டி, சிறிய குதிரை மற்றும் பெரிய குதிரை ரேக்ளா ரேஸ்கள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் பெண்கள், சிறியவர், மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. 4 ஆண்டுகளுக்கு பிறகு குதிரைப்பந்தயம் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர். மாவட்ட காவல் துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.