திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்துள்ள ஆலத்தம்பாடி பகுதியில் தமிழ்நாடு ஏஐடியுசி மீனவர் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக மத்திய மாநில அரசுகளுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு திட்டங்களை அரசு திரும்பப் பெற வேண்டும், பழைய நடைமுறை சட்டத்தில் உள்ள திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மேலும், மத்திய அரசு கடல் வளத்தையும், உள்நாட்டு மீன் வளத்தையும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும், மீன்பிடித் தொழிலையும், மீனவ தொழில்களையும் பாதுகாத்திட வேண்டும், தேசிய மீன்வள கொள்கை வரைவு 2020-ஐ அரசு திரும்ப பெற வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.