ETV Bharat / state

பொங்கு சனீஸ்வரர் ஆலய திருக்குளம் தூர்வாரும் பணி தொடக்கம் - பிரபலமான சனீஸ்வரர் ஆலயம்

திருவாரூர்: திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் ஆலயத்தில் திருக்குளம் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது.

temple construction work
Pongu Saneeswarar temple
author img

By

Published : May 26, 2020, 4:16 PM IST

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் ஆலயத்தில் திருக்குளம் தூர்வாரி படித்துறை அமைக்கும் பணி, சிட்டி யூனியன் வங்கி நிதி உதவியுடன், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் முதற்கட்டப்பணி நடைபெற உள்ளது. இந்தக் குளத்திலிருந்து எடுக்கப்பட உள்ள மண்ணைக் கொண்டு கோயிலின் சுற்றுச்சுவர் உயர்த்தப்படவுள்ளது. நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடம் அமைக்கும் வகையில், பெரும் அளவில் பள்ளப்பகுதியாக இருந்த சுற்றுப்புறப்பகுதியினை, மேடாக்கி மைதானமாக மாற்றும் பணிகள் நடைபெறயிருக்கின்றன.

இப்பணியை தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தொடக்கி வைத்தார். இந்நிகழ்வில் கோயில் செயல் அலுவலர் சுரேந்திரன், விவசாயிகள், கிராம மக்கள் பலர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: குடிநீர் தேவைக்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.