திருவாரூர்:திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள வண்டாம்பாளை பகுதியை சேர்ந்தவர் செந்தில் (38). இவர் 11 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் திருவாரூரை சேர்ந்த ஜெகதீசன் என்ற சிவசுப்பிரமணியன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 2008ஆம் ஆண்டு சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த அவர், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக பதினோரு ஆண்டுகளாக மலேசியாவில் தனது காதலியுடன் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில், சிவசுப்பிரமணியன் மலேசியாவில் இருந்து வருவது காவல் துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து மலேசியாவில் இருந்து விமானத்தில் திருச்சி விமான நிலையம் வந்த சுப்பிரமணியனை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க:கந்துவட்டி கொடுமை: நடிகை ஜெயலட்சுமி மீது புகார்.