திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவந்த திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "அமைச்சர்களுக்கு கண்ணியமாகப் பேசத் தெரியவில்லை. வாய்க்கு வந்ததையெல்லாம் பேசும் நிலையில் உள்ளனர்.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக 60 விழுக்காடு இடம்பிடித்திருப்பது மக்கள் திமுக பக்கம் வந்துள்ளதையே வெளிப்படுத்துகிறது. இதை அதிமுக ஏற்க மறுக்கிறது. 2021இல் ஸ்டாலின் முதலமைச்சராவார் என்ற நம்பிக்கை மக்களிடம் வந்துவிட்டது.
அதிமுக செய்தித் தொடர்பாளர் ஜவகர் அலி பாஜகவுக்கு எதிராகப் பேசியதால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது போல் அமைச்சர்கள் பாஸ்கர், ராஜேந்திரபாலாஜி ஆகியோரும் அதிமுகவிலிருந்து நீக்கப்படும் நிலை விரைவில் வரும்" என்றார்.
மத்திய அரசை ஆணித்தரமாக எதிர்க்கும் நிலையில் அதிமுக இல்லை எனச் சொன்ன தங்க தமிழ்ச்செல்வன், அதிமுக வலுவாக உள்ளதாகக் கூறும் நிலையில் சசிகலா வர வேண்டும் என அமைச்சர்கள் கூறுவது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க