திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கோவிலூர் கிழக்கு கடற்கரை சாலை அருகே பழங்குடியின வகுப்பை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிசை போட்டு வசித்து வருகின்றனர். இந்நிலையில் தற்பொழுது ஊரடங்கு உத்தரவால் இங்குள்ள அனைவரும் வேலைக்கு செல்ல முடியாமலும் வருமானத்திற்கு வழியில்லாமலும் உணவுக்கு வழியின்றி பரிதவித்து வந்தனர்.
இதனை அறிந்த வருவாய்த்துறையினர் அந்த குடும்பங்களுக்கு உதவ முன்வந்தனர். இதனையடுத்து திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் ஜெகதீசன் உணவின்றி தவித்த பழங்குடியின வகுப்பை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரிசி, பால் பவுடர் உள்பட மளிகை பொருள்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட துணை தாசில்தார் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் கஜேந்திரன், கிராம நிர்வாக அலுலவர் தினேஷ்குமார், உதவியாளர் பாண்டியன் உள்பட வருவாய்த்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: விவசாயிகள் நலனுக்காக உளுந்து, பயிறு வகைகளின் மறைமுக ஏல விற்பனை