ETV Bharat / entertainment

2024இல் இளைஞர்களை வைப் செய்ய வைத்த சிறந்த ஆல்பம் பாடல்கள்! - BEST ALBUMS 2024

Best Independent albums 2024: 2024-ஆம் ஆண்டு இணையத்தில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த ஆல்பம் பாடல்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்

சாய் அபயங்கர், அசல் கோலார் பாடல் போஸ்டர்
சாய் அபயங்கர், அசல் கோலார் பாடல் போஸ்டர் (Photo: Film Posters)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Dec 19, 2024, 9:16 AM IST

சென்னை: தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் புதிய இசையமைப்பாளர்கள் கவனம் பெற்று வருகின்றனர். பிரபல இசையமைப்பாளர்கள் ஏ.ஆர். ரகுமான், அனிருத் என பலர் சுயாதீன ஆல்பங்களை (Independent albums) உருவாக்கியுள்ளனர். அனிருத் உருவாக்கிய எனக்கென யாரும் இல்லையே (Enakena yaarum illaye), சென்னை சான்ஸே இல்ல (Chennai chancea illa) ஆகிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அந்த வகையில் இந்த ஆண்டு பால் டப்பா (paal dabba), அசல் கோலார் (asal kolaar), சாய் அபயங்கர், OfRo என பல இளம் இசையமைப்பாளர் தங்கள் திறமையை நிரூபித்துள்ளனர். இந்த ஆண்டு ரசிகர்களை ஈர்த்த சிறந்த சுயாதீன ஆல்பங்கள் குறித்து பார்க்கலாம்.

காத்து மேல பாடல் (Kathu mela): அனிஷ் என இயற்பெயர் கொண்ட பால் டப்பா எழுதி நடித்த பாடல் 'காத்து மேல'. இப்பாடலுக்கு OfRo என்பவர் இசையமைத்துள்ளார். இப்பாடல் குழந்தைகள் மத்தியில் அதிகமாக பிரபலமானது. மேலும் சமூக வலைதளத்தில் மீம்ஸ்களில் அதிகமாக பயன்படுத்தப்பட்டது. 'காத்து மேல' பாடல் யூடியூபில் இதுவரை 58 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

ஆச கூட பாடல் (Aasa kooda): இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ஆல்பம் ‘Aasa kooda’ பாடல். இதுவரை aasa kooda ஆல்பம் பாடல் யூடியூபில் 180 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. மேலும் இந்த பாடலை பாடிய சாய் ஸ்மிருதியின் குரலை ரசிகர்கள் அதிகளவில் பாராட்டினர். இந்த ஆல்பம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தற்போது லோகேஷ் கனகராஜ் தயாரித்து வரும் ’பென்ஸ்’, ’சூர்யா 45’ ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்சி சேர பாடல் (Katchi sera): சாய் அபயங்கர் இசையில் வெளியான 'கட்சி சேர' ஆல்பம் பாடல் உலக அளவில் பிரபலமடைந்தது. இந்த 2024ஆம் வருடம் உலக அளவில் அதிகம் தேடப்பட்ட பாடல்கள் வரிசையில் 4வது இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது. இதுவரை யூடியூபில் ’கட்சி சேர’ பாடல் 195 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

இதையும் படிங்க: "ரத்தம், பவுடர் எல்லாம் வராம பாத்துக்கோங்க"... லோகேஷ் கனகராஜின் ’மிஸ்டர் பாரத்’ பட ப்ரோமோ வெளியீடு!

மேலும் பல திரைப் பிரபலங்கள் இந்த பாடலுக்கு நடனமாடி இன்ஸ்டாகிராம் ரீல்சாக பதிவிட்டனர்.

யாரா அந்த பையன் பாடல் (paiya dei): நடிகர் அசல் கோலார் எழுதி, நடித்த ஆல்பம் பாடல் 'paiya dei'. இந்த பாடல் சில மாதங்களுக்கு முன் வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. இப்பாடலை 2கே கிட்ஸ் எனப்படும் இந்த கால இளம் தலைமுறையினர் அதிகம் விரும்புகின்றனர். இப்பாடல் வெளியான 2 மாதத்தில் 21 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. ’யாரா அந்த பையன்’ பாடல் மூலம் கவனம் பெற்ற அசல் கோலார், ’வேட்டையன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.