ETV Bharat / state

அம்பேத்கர் குறித்து பேச்சு: அமித்ஷாவை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக போராட்டம் அறிவிப்பு! - AMIT SHAH AMBEDKAR ISSUE

அம்பேத்கர் குறித்து நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேசியது சர்ச்சையானது தொடர்பாக, தமிழ்நாடு முழுவதும் ஆளும் திமுக இன்று போராட்டத்தை முன்னெடுக்கிறது.

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம் (X / @arivalayam)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 19, 2024, 10:18 AM IST

சென்னை: மாநிலங்களவையில் அரசியல் சாசனத்தின் மீதான விவாதத்தின் போது, ஒன்றிய அமைச்சர் அமித்ஷா அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியதாக திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த சூழலில், இன்று (டிசம்பர் 19) மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என திமுக தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது.

மாநிலங்களவையில் டிசம்பர் 17 அன்று நடந்த அரசியல் சாசனம் மீதான விவதத்தின் போது பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "தற்போது 'அம்பேத்கர், அம்பேத்கர்' என்று பேசுவது பேஷனாகி விட்டது. இப்படி சொல்வதற்கு பதிலாக கடவுளின் நாமத்தை பல முறை உச்சரித்திருந்தால், அவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கும்," என்று கூறினார். இது ஒரு பெரும் சர்ச்சையாக வெடித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் நேற்று புதன்கிழமை (டிசம்பர் 18) நாடாளுமன்றத்திற்கு வெளியே அம்பேத்கர் படத்தை கையில் ஏந்தி போராட்டம் நடத்தினர். மேலும், அமித்ஷா கருத்து குறித்து பல்வேறு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், இன்று (டிசம்பர் 19) ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என திமுக அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: "அதிக பாவங்கள் செய்பவர்கள் தான் புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்" - அமித்ஷா பேச்சுக்கு முதல்வர் விமர்சனம்!

இதுதொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய அரசியலைமப்புச் சட்டத்தை வடிவமைத்த சட்டமேதை, புரட்சியாளர் அம்பேத்கரை அவமதித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா அவர்களைக் கண்டித்து திராவிட முன்னேற்றக்கழகம் சார்பில் இன்று (19-12-2024) காலை 11.30 மணியளவில் தமிழ்நாடு முழுக்கவும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்," என்று கூறப்பட்டிருந்தது.

முன்னதாக இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "அதிக பாவங்கள் செய்பவர்கள் தான் புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் அரசியல் சட்டத்தின் பாதுகாப்பு பற்றியும் கவலைப்படுவோர் புரட்சியாளர் அம்பேத்கர் பெயரைத்தான் சொல்வார்கள்; சொல்ல வேண்டும்," என்று பதிவிட்டிருந்தார்.

காலையிலேயே தொடங்கிய போராட்டம்:

திமுக போராட்டம் அறிவிப்பதற்கு முன்னதாகவே, தமிழ்நாட்டில் ரயில் மறியல் போராட்டங்களை விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னெடுத்தது. அதேபோல காங்கிரஸ் கட்சித் தொடண்டர்களும் ஆங்காங்கே போராட்டம் நடத்தினர்.

சாலைகளில் அம்பேத்கர் படத்துடன் போராட்டம் நடத்திய கட்சி தொண்டர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.