ETV Bharat / state

தினசரி வகுப்புகள் குறித்து 25-ம் தேதி முக்கிய அறிவிப்பு! - தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது

6 முதல் 12 வரை தினமும் வகுப்புகள் நடத்துவது குறித்து டிசம்பர் 25-ம் தேதி அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

author img

By

Published : Dec 16, 2021, 4:39 PM IST

திருவாரூர் மாவட்ட மைய நூலகத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (டிசம்பர் 16) நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது தொடர்பாக பிரதமர், ஆளுநரை சந்தித்து ஏற்கனவே வலியுறுத்தி இருக்கிறோம். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு சட்டரீதியான போராட்டத்தில் முதலமைச்சர் ஈடுபட்டு வருகிறார். மாணவர்கள் சொல்வதை ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைவரும் காது கொடுத்து கேட்க வேண்டும்.

அவர்களுக்கு எதுவும் தெரியாது என்று வாயை அடைக்க வேண்டாம். அவ்வாறு செய்தால் அதற்குப்பின் மாணவர்களிடமிருந்து எதையும் பெற முடியாது. குழந்தைகள் மனதில் இருப்பதை முழுமையாக தெரிந்து கொள்ள அனைவரும் முயற்சி செய்யுங்கள். 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதிரி தேர்வு ஜனவரி மாதம் நடைபெற உள்ளது" என்றார்.

தமிழ்நாட்டில் ஒமைக்ரான் பரவத் தொடங்கி உள்ள நிலையில், பள்ளி மாணவர்களுக்கு தினசரி வகுப்புகள் நடைபெறும் என்ற அறிவிப்பு குறித்து கேட்டதற்கு, "6 முதல் 12 வரை தினமும் வகுப்புகள் நடத்துவது குறித்து டிசம்பர் 25 ஆம் தேதி முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்" என்றார்.

பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

உதயநிதி ஸ்டாலின் மேயர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, "உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவை உறுப்பினராக மிக சிறப்பாக பணியாற்றி வருகிறார். அடுத்த பெரிய பொறுப்புக்கு வர வேண்டும். அவர் அமைச்சராக வந்தால் நல்லது" என்றார்.

இதையும் படிங்க: கத்திபாரா சதுக்கத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.