ETV Bharat / state

மாரடைப்பால் உயிரிழந்த ஆசிரியருக்கு மாணவர்களின் கண்ணீர் அஞ்சலி

திருவாரூர்: மாரடைப்பால் உயிரிழந்த அரசுப் பள்ளி ஆசிரியரின் இறுதி ஊர்வலத்தில் பள்ளி மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

teacher died of heart attack
teacher died of heart attack
author img

By

Published : Feb 7, 2020, 10:36 AM IST

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்தவர் செல்வகுமார்(48). இவர், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா நெம்மேலி நடுநிலைப்பள்ளியில் கடந்த பத்து வருடங்களாக அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் (பிப். 05) நன்னிலம் அருகே டீக்கடைக்கு சென்றபோது செல்வகுமார் மயங்கி விழுந்தார். அருகிலிருந்தவர்கள், அவரை நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு செல்வகுமாரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டார் என தெரிவித்தனர்.

இதையடுத்து, உடற்கூறாய்வு செய்யப்பட்ட பின் செல்வகுமாரின் உடல், அவர் பணியாற்றிய நெம்மேலி நடுநிலைப் பள்ளிக்கு கொண்டு வரப்பட்டது. ஊர் பொதுமக்களும் மாணவ - மாணவிகளும் ஆசிரியரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அப்போது மாணவர்களும் பொதுமக்களும் கண்ணீர்விட்டு கதறி அழுதது அங்கிருந்தவர்களை கண்கலங்கச் செய்தது. பின்னர் அவரது உடல் அவரின் சொந்த ஊரான திருநெல்வேலிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த டாக்ஸி ஓட்டுநர்

Intro:Body:அரசு பள்ளி ஆசிரியர் மாரடைப்பில் நேற்று மரணம்.பள்ளி மாணவ மாணவிகள் ஊர் மக்களும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் என்.ஜி.ஓ காலனி குழந்தைவேலு என்பவரது மகன் செல்வகுமார் வயது 48 இவர் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா நெம்மேலி நடுநிலைப்பள்ளியில் பத்து வருடங்களாக அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நேற்று நன்னிலம் அருகே டீக்கடைக்கு டீ அருந்த சென்ற பொழுது மயங்கி விழுந்தார்.உடன் அருகில் இருந்தவர் அருகில் உள்ள நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பொழுது அவர் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவர் பணியாற்றிய நெம்மேலி நடுநிலைப் பள்ளிக்கு எடுத்து வரப்பட்டது ஊர் பொது மக்களும் மாணவ மாணவிகளும் கண்ணீர்விட்டு கதறினர்.

இச்சம்பவத்தால் அந்த கிராமமே கண்ணீரில் மூழ்கியது பிறகு அவர் சொந்த ஊரான திருநெல்வேலிக்கு அவரது உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்.

இதனால் அந்த பகுதி முழுவதும் சோகத்தில் ஆழ்ந்து இருந்தது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.