தமிழ்நாட்டில் கோடை வெயில் கடுமையாக சுட்டெரித்து வரும் நிலையில், தற்போது அக்னி வெயிலும் தொடங்கி வாட்டிவதைத்து வருகிறது. பொதுமக்கள் வெயிலுக்கு பயந்து வெளியில் நடமாடுவதை தவிர்த்து வருகின்றனர்.
மேலும், கோடை மழையும் ஏமாற்றியதால் தமிழ்நாட்டில் ஆங்காங்கே தண்ணீர் பஞ்சமும், குடிநீர் பஞ்சமும் நிலவி வருகிறது.
இந்நிலையில், இந்து அறநிலையத்துறையின் அறிவுறுத்தலின்படி அனைத்து கோயில்களிலும் மழை வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்று வருகிறது.
இதன்படி, உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் உலக நன்மைக்காவும், மழை வேண்டியும், பயிர்கள் செழிக்கவும் அசலேஸ்வரர் சன்னதியில் வருண பகவானுக்கு சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில், திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் நிர்வாக அலுவலர் கவிதா மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.