ETV Bharat / state

பாஜக, காங்கிரஸிடம் ஒப்படைத்தால் நாடு 5 பைசாவுக்குக்கூட தேறாது: சீமான் காட்டம்...! - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்

திருவாரூர்: பாஜக, காங்கிரஸிடம் நாட்டை ஒப்படைத்தால் நாடு 5 பைசாவுக்குக்கூட தேறாது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாகக் கூறியுள்ளார்.

சீமான்
author img

By

Published : Apr 9, 2019, 10:11 AM IST

நாட்டில் ஏழு கட்டங்களாக நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் இந்த மாதம் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. மேலும் இதே நாளில் 18 சட்ட மன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பணிகளும், பரப்புரைகளும் நாடு முழுவது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் திருவாரூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் வினோதினி மற்றும் நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் மாலதி ஆகியோரை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

"எங்களால்தான் நாட்டைப் பாதுகாக்க முடியும் என பாரதிய ஜனதா கட்சியினர் கூறுகிறார்கள். ஆனால் பாரதிய ஜனதாவிடமிருந்துதான் நாட்டைக் காப்பாற்ற வேண்டும். ஒன்றுமே இல்லாத பாரதிய ஜனதாவை திமுகதான் தமிழகத்திற்கு அழைத்து வந்தது. இந்தியாவிற்கு பக்கத்து நாடாக பாகிஸ்தான் இல்லை என்றால் பாரதிய ஜனதாவுக்கு எப்படி அரசியல் இல்லையோ, அதேபோன்று இந்தத் தேர்தலில் பாரதிய ஜனதா இல்லை என்றால் திமுகவிற்கு அரசியல் இல்லை" என்று சாடினார்.

மேலும், "எதிர் காலத்தில் பாஜகவிடமும், காங்கிரஸிடமும் நாட்டை ஒப்படைத்தால் நாடு ஐந்து பைசாவிற்குக்கூட தேறாது" என்று சீமான் கடுமையாக விமர்சித்தார்.

Intro:இனி வரும் காலங்களில் பாரதிய ஜனதாவிடமும், காங்கிரஸிடமும் நாட்டை ஒப்படைத்தால் நாடானது 5 பைசாவுக்கு கூட தேறாது என நாம்தமிழர் பிரச்சார பொதுக்கூட்டத்தில் சீமான் ஆவேசம்.

சீமான் பிரச்சாரக் கூட்டத்திற்கு திடீர் வருகை தந்த திமுக தலைமையிலான கூட்டணி அமைந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை நாடாளுமன்ற வேட்பாளர் செல்வராசு.

Body:
இனி வரும் காலங்களில் பாரதிய ஜனதாவிடமும், காங்கிரஸிடமும் நாட்டை ஒப்படைத்தால் நாடானது 5 பைசாவுக்கு கூட தேறாது என நாம்தமிழர் பிரச்சார பொதுக்கூட்டத்தில் சீமான் ஆவேசம்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வருவதையொட்டி பல்வேறு கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் திருவாரூர் சட்டமன்ற வேட்பாளர் வினோதினி மற்றும் நாகை நாடாளுமன்ற வேட்பாளர் மாலதி ஆகியோருக்கு வாக்கு சேகரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சார பொதுக்கூட்டத்தில் சீமான் பேசியதாவது...

பாரதிய ஜனதா எங்களால் தான் நாட்டை பாதுகாக்க முடியும் எனக் கூறுகிறார்கள், ஆனால் பாரதிய ஜனதா விடமிருந்து தான் நாட்டை காப்பாற்ற வேண்டும். திமுக தான் ஒன்றுமே இல்லாத பாரதிய ஜனதாவை தமிழகத்திற்கு அழைத்து வந்தது.

இந்தியாவிற்கு பக்கத்து நாடாக பாகிஸ்தான் இல்லை என்றால் பாரதிய ஜனதாவுக்கு எப்படி அரசியல் இல்லையோ? அதேபோன்று இந்த தேர்தலில் பாரதிய ஜனதா இல்லை என்றால் திமுகவிற்கு அரசியல் இல்லை. பாரதிய ஜனதா வந்துவிடக்கூடாது எனவே எங்களுக்கு ஓட்டு போடுங்கள் என திமுக காரர்கள் ஓட்டு கேட்டு வருகின்றனர்.

இனிவரும் காலங்களில் பாரதிய ஜனதா விடமும் காங்கிரஸிடமும் நாட்டை ஒப்படைத்தால் நாடானது ஐந்து பைசாவிற்கு கூட தேறாது என கடுமையாக விமர்சித்தார்.

நாம் தமிழர் பிரச்சாரக் கூட்டத்திற்கு திமுக தலைமையிலான கூட்டணியில் அமைந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை நாடாளுமன்ற வேட்பாளர் எம்.செல்வராசு தீடிர் வருகை தந்தார். மேலும் மேடை ஏறி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இடம் கைகுலுக்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.

முன்னதாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் செல்வராசு கலந்து கொள்ளாதது குறிப்பிடத்தக்கது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.