நாடு முழுவதும் கரோனா தொற்று பாதிப்பு குறைந்துவருவதால் பல்வேறு மாநிலங்கள் பள்ளி, கல்லூரிகளை திறந்துவருகின்றன. அந்த வகையில் செப்.1ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுவருகிறது. இதனால் பாதிப்பு ஏற்படும் பள்ளிகளுக்கு தற்காலிமாக விடுமுறை அளிக்கப்படுவருகிறது.
இந்த நிலையில், திருவாரூர் மாவட்டம் வீரபாண்டி அருகில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் நான்கு மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் அந்தப் பள்ளிக்கு இன்று முதல் மூன்று நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜம்முவில் கரோனா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை!