திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டத்தை அடுத்த செளதபதி கிராமத்தில் உள்ள அருள்மிகு முக்தீஸ்வரர் ஆதிவிநாயகர் ஆலயத்தில் உள்ள தமிழ் ஆண்டான சார்வரி ஆண்டிற்கான பஞ்சாங்க கணிப்புகள், பண்டிகைகள், திதிகள், திருவிழாக்கள் போன்றவற்றை முடிவு செய்யும் பஞ்சாக சதஸ் எனப்படும் இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்த சதஸில் சார்வரி ஆண்டு புரட்டாசி மாதத்தில் இரண்டு அமாவாசை வருவதால் மாத கடைசியில் வரும் அமாவாசைக்கு பிறகு வரும் பிரதமை திதி நாளான ஐப்பசி ஒன்றாம் தேதி நவராத்தி விழாவை தொடக்க வேண்டும் எனவும், அந்த ஆண்டில் நவராத்தி விழா எட்டு நாட்களே வருவதால் எட்டாம் நாளன்று மாலை ஆலயங்களில் விஜயதசமி அம்பு போடும் விழாவையும், நவராத்திவிழாவையும் நடத்தவேண்டும், மறுநாள் விஜயதசமி கொண்டாடலாம் எனவும் கணிக்கப்பட்டது.
மேலும் சார்வரி வருடம் மார்கழி 12ஆம் நாள் ( 2020 ஆண்டின் டிசம்பர் மாதம் 21ஆம் நாள் ) அன்று சனிபெயர்ச்சியை ஆலயங்களில் நடத்தலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டது. வீடுகளில் எந்தந்த விஷேச நாட்களில் சுப காரியங்கள் நடத்துவது, பண்டிகைகள் கொண்டாடுவது, குறித்தும் கணிக்கப்பட்டது. இந்த சதஸின் முடிவின் அடிப்படையிலேயே அடுத்த தமிழ் ஆண்டான சார்வரி ஆண்டுக்கான பஞ்சாகம் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்க:
உலகமே மெச்சும் கீழடி நீர் மேலாண்மை - தமிழ்நாடு தொல்லியல் துறை