திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே கூத்தனூரில் மகாசரஸ்வதி ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் சரஸ்வதி பூஜை விழா என்பது ஒவ்வொரு வருடமும் வெகு விமர்சையாக கொண்டாடபடுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் கரோனா அச்சத்தால் அரசின் வழிகாட்டுதலின்படி தகுந்த இடைவெளியுடன் பக்தர்கள் கோவிலினுள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தியாவிலேயே சரஸ்வதிக்கு என்று தனி சன்னதி அமைந்துள்ளது என்றால் அது கூத்தனூரில்தான். ஒட்டக்கூத்தன் எனும் தமிழ் கவிஞனுக்கு சரஸ்வதி தேவியின் அருள் கிடைத்தபின் இந்த தளத்தில் வழிபட்டதால் கூத்தனூர் என பெயர் பெற்றது என வரலாறு உள்ளது. இந்த வருடம் நவராத்திரி நிகழ்ச்சிகள் 12 நாட்கள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் 9-வது நாளான இன்று சரஸ்வதி பூஜை பாத தரிசனம் நடைபெற்றது.
இதையும் படிங்க: வெள்ளையர்கள் உறங்கும் கல்லறை தோட்டம் மதுரையில்...