தமிழ்நாடு முழுவதும் கரோனா தடுப்புப் பணியில் மருத்துவர்கள், செவிலியர், தூய்மைப் பணியாளர்கள் கடுமையாக தங்களின் சேவையை ஆற்றிவருகின்றனர்.
இந்நிலையில், தூய்மைப் பணியாளர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்கு உடற்பயிற்சி செய்ய வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி அனைத்துத் துறை அலுவலர்களிடமும் கேட்டுக்கொண்டார்.
அதன் ஒரு பகுதியாக திருவாரூர் நகராட்சியில் தூய்மைப் பணியில் ஈடுபடும் 350-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு, நகராட்சி ஆணையர் சங்கரன் உடற்பயிற்சி செய்வது குறித்து பயிற்சி அளித்தார். இதில் தூய்மைப் பணியாளர்கள் பவனமுக்தாசனம், மூச்சுப் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு உடற்பயிற்சியை செய்தனர்.
தூய்மைப் பணியாளர்கள் வேலைக்குச் செல்லும் முன்பாக காலை 6 மணி முதல் 6.30 மணி வரை தினமும் பயிற்சி மேற்கொள்வார்கள் என தெரிகிறது. இதில் கலந்துகொண்ட தூய்மைப் பணியாளர்களுக்கு முகக்கவசம், கபசுர குடிநீர் கொடுக்கப்பட்டது.
இதையும் படிங்க: பாதுகாப்பு உபகரணங்களின்றி பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள்