திருவாருர் மாவட்டத்தில் உள்ள குடவாசல் பகுதிக்குட்பட்ட அரசவனங்காடு என்னுமிடத்தில் வட்டாச்சிரியர் பரஞ்சோதி வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரே பதிவெண் கொண்ட இரு லாரிகள் மணல் கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது. அந்த இரு லாரிகளை விரட்டிப் பிடித்தபோது, லாரி ஒட்டுநர்கள் தப்பி ஓடிவிட்டனர். லாரிகளை சோதனை செய்தபோது உரிய ஆவணங்களின்றி மணல் கடத்தலில் ஈடுப்பட்டது தெரியவந்தது. இதேபோன்று குடவாசல் பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட மற்றொரு லாரியும் பிடிபட்டது
இரு லாரி ஒட்டுநர்கள் தப்பியோடிய நிலையில் மூன்றாவது லாரியின் ஒட்டுனர் அன்புராஜ் (30) என்பவர் மட்டும் பிடிப்பட்டார். மூன்று லாரிகளையும் பறிமுதல் செய்த காவல்துறையினர், குடவாசல் வட்டாச்சிரியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். பிடிபட்ட ஒட்டுநர் அன்புராஜிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கரூரிலிருந்து வேளாங்கண்ணிக்கு மணல் கடத்தியது தெரியவந்தது. வட்டாச்சியர் பரஞ்சோதி அளித்த புகாரின் பேரில் குடவாசல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய இருவரையும் தேடி வருகின்றனர்.
இதையும் படிக்க:நூதன முறையில் மணல் கடத்தல் - ஒருவர் கைது, டிராக்டர் பறிமுதல்!