திருவாரூர் மாவட்டம் நன்னிலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்து வந்தனர். தற்போது, குறுவை சாகுபடி முடிந்ததையடுத்து சம்பா சாகுபடிக்கு தயாராகி வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, "பல்வேறு இடர்பாடுகளுக்கிடையே குறுவை சாகுபடி செய்து வந்தோம். தண்ணீர் பிரச்னை, யூரியா, பொட்டாசியம், பூச்சிக்கொல்லி, மருந்துகள் தட்டுப்பாடு மத்தியில் சாகுபடி பணிகள் முடிவடைந்தது. தற்போது, சம்பா சாகுபடிக்கு தயாராகி வருகிறோம்.
இந்த சம்பா சாகுபடியிலாவது குறிப்பிட்ட நேரத்திற்கு யூரியா, பொட்டாசியம், பூச்சிக்கொல்லி உள்ளிட்ட இடுபொருள்கள் உரிய நேரத்தில் கிடைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரிக்கை வைத்தனர்.

இதையும் படிங்க: 41 பி.எட்., கல்லூரிகளுக்கு நோட்டீஸ்: மாணவர்களை சேர்ப்பதில் சிக்கல்