ETV Bharat / state

சம்பா சாகுபடி - வாய்கால்களை தூர்வார விவசாயிகள் கோரிக்கை

திருவாரூர் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் உள்ள சிறு-குறு வாய்க்கால்களை முழுமையாக தூர்வாரினால் மட்டுமே சம்பா சாகுபடியை முழுமையாக செய்து இலக்கை அடைய முடியும் என திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சம்பா சாகுபடி விவசாயிகள் கோரிக்கை
சம்பா சாகுபடி விவசாயிகள் கோரிக்கை
author img

By

Published : Sep 5, 2021, 9:41 PM IST

திருவாரூர்: காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் சாகுபடி செய்து வருகின்றனர்.

குறிப்பாக மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரை நம்பி 70 விழுக்காடு விவசாயிகளும், ஆழ்துளை கிணறுகளை நம்பி 30% விவசாயிகளும் விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறுவை சாகுபடி

இந்நிலையில், கடந்த 8 ஆண்டுகளாக மேட்டூர் அணை திறக்கப்படாத காரணத்தினால், ஒரு போக சாகுபடி மட்டுமே செய்யப்பட்டது. இந்தாண்டு ஜூன் 12தேதி மேட்டூர் அணை தண்ணீர் திறக்கப்பட்டதன் காரணமாக குறுவை சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் காட்டி, மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 36-ஏக்கர் சாகுபடி செய்து இலக்கை அடைந்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் 4 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு சம்பா சாகுபடிக்கான பணிகள் தொடங்கி நிலத்தை உழும் பணி, நெல் விதைப்பது உள்ளிட்ட பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த ஆண்டு முழுமையாக தண்ணீர் வந்து சேரும் என்ற நம்பிக்கை இருந்தபோதிலும், திருவாரூர் மாவட்டத்தில் ஆறுகள், ஏரிகளில் இருந்து பிரிந்து செல்லும் ஏ,பி, சி ஆகிய வாய்க்கால் தூர்வாரப்படாத காரணத்தினால், கிராமப்புறங்களுக்கு தண்ணீர் சென்று சேருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

நடவடிக்கை வேண்டும்

எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கவனத்திற்கொண்டு கிராம பகுதிகளில் உள்ள சிறு-குறு வாய்க்கால்களை முழுமையாக தூர்வாரினால் மட்டுமே முழுமையான சம்பா சாகுபடி செய்ய முடியும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

வாய்கால்களை தூர்வார விவசாயிகள் கோரிக்கை

மேலும், மாவட்டம் முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் மூலம் யூரியா தட்டுப்பாடு அதிகமாக நிலவி வருவதால், சம்பா பணிக்கு தயாராகும் நேரத்தில் யூரியா, பொட்டாசியம் தட்டுப்பாடின்றி வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.