திருவாரூர்: புதுச்சேரி அரசின் சார்பு நிறுவனமான பாப்ஸ்கோ தீபாவளி சிறப்பங்காடியை நடத்தி வருகிறது. இந்த நிறுவனம் கடந்த மூன்றாண்டுகளாக நொடிந்து போனதால் தீபாவளி அங்காடியைப் போடமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த நிலையில் நொடிந்து போன பொதுத்துறை நிறுவனங்கள் மீட்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார்.
அதன்படி தீபாவளி பண்டிகையையொட்டி புதுச்சேரி மாநிலம் காரைக்கால் திருநள்ளாறு ரோட்டில் அமைந்துள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் பாப்ஸ்கோ நிறுவனத்தின் சார்பில் தீபாவளி சிறப்பங்காடி புதுச்சேரி மாநில குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவணன் தலைமையில் திறக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் நாஜிம், சிவா, நாக தியாகராஜன் மற்றும் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இந்தச் சிறப்புத் தீபாவளி அங்காடியில் பொது மக்கள் ஆர்வத்தோடு வந்து வாங்கி செல்கின்றனர்.
இதையும் படிங்க:நீட் தேர்வு முடிவுகளை வெளியிடலாம்; தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்