அமெரிக்காவில் மினியாபோலிஸ் நகரில், காவலர் ஒருவரின் பிடியில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கர் உயிரிழந்த சம்பவம் அந்நாட்டையே உலுக்கிவருகிறது.
இச்சம்பவத்திற்கு எதிராக அமெரிக்கா உள்பட கிரீஸ், இத்தாலி, டென்மார்க், ஜெர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் போராட்டங்கள் பெரியளவில் நடைபெறுகிறது.
இந்நிலையில், ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணத்திற்கு நீதிகேட்டு போராடும் அமெரிக்க மக்களுக்கு ஆதரவாகவும், அமெரிக்காவில் நிலவி வரும் கறுப்பின மக்கள் மீதான நிறவெறித் தாக்குதலை கண்டித்தும் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பெரியார் சிலை முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் அமெரிக்க காவல்துறையை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதையும் படிங்க: அமெரிக்க காவல் துறையினரை சட்டத்தின் முன்னிறுத்தும் புதிய சட்டம்!