ETV Bharat / state

தந்தை - மகன் இறந்த விவகாரம்: கொலை வழக்காகப் பதிவுசெய்ய கோரிக்கை - sathaankulam father and son death

திருவாரூர்: விசாரணை கைதிகளாகச் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை, மகன் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தது கரோனாவைவிட கொடுமையானது என பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.

பிஆர் பாண்டியன்
பிஆர் பாண்டியன்
author img

By

Published : Jun 24, 2020, 1:47 PM IST

இது தொடர்பாக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார் .அதில், “தமிழ்நாட்டில் கரோனா தொற்று தீவிரமடைந்துவருவதால் வணிகர்கள் தானே முன்வந்து தூத்துக்குடி உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடை திறப்பு நேரங்களைக் குறைத்தும், கடையடைப்பு செய்து அரசுக்குத் துணைபுரிந்துவருகின்றனர்.

கடந்த மூன்று மாத காலமாக காவல் துறையும் நோய்த்தொற்று பரவலைத் தடுத்து நிறுத்த உயிரைப் பணயம் வைத்து ஓய்வின்றி செயலாற்றிவருவதைப் பார்த்துவருகிறோம்.

இந்நிலையில் ஒரு சில இடங்களில் பொறுப்பற்ற சில காவலர்களால் பொதுமக்கள் விவசாயிகள், வணிகர்கள் தாக்கப்படுவது ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் வெளியாகிவருவது வேதனையளிக்கிறது.

இதனையறிந்த காவல் துறை உயர் அலுவலர்கள் காவலர்கள் லத்தியால் அடிக்கக் கூடாது எனவும், வாக்குவாதம் முற்றுமேயானால் உடனடியாக உயர் அலுவலர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். கட்டுப்படாத நிலை இருக்குமேயானால் உரிய வழக்குகள் பதிவுசெய்து நீதிமன்ற நடவடிக்கைக்கு உள்படுத்த வேண்டுமென அறிவுரை வழங்கிவருகின்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் மொபைல் கடை நடத்திவரும் ஜெயராஜ் அவரது மகன் ஃபென்னிக்ஸ் இருவரிடமும் கடை அடைப்பது குறித்து காவலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். கோபமடைந்த காவல் உதவியாளர் உள்ளிட்ட காவலர்கள் தந்தை, மகன் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று கடுமையாகத் தாக்கியுள்ளதாகத் தெரிகிறது.

பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இருவரும் ஒருவர்பின் ஒருவராக உயிரிழந்த செய்தி அதிர்ச்சியையும், பெரும் சந்தேகத்தையும் அளிக்கிறது. இச்செயல் கரோனாவைவிட கொடுமையான மன்னிக்க முடியாத பெரும் குற்றமாகும்.

இந்தச் செயல் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிவரும் தமிழ்நாடு காவல் துறை மீதும், மக்களுக்கு நீதி வழங்கும் நீதித் துறை மீதும் பெரும் சந்தேகமும் களங்கமும் கற்பிக்கும் வகையில் உள்ளது.

எனவே இந்த வழக்கை உடனே கொலை வழக்காகப் பதிவுசெய்து உயர் நீதிமன்ற நீதிபதி மூலம் உரிய விசாரணை செய்து ஓரிரு நாள்களுக்குள் உண்மை சம்பவத்தை வெளிக்கொண்டு வர வேண்டும்.

குற்றவாளிகளை அடையாளம் கண்டு உரிய தண்டனை வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் முன்வர வேண்டும். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.50 லட்சம் அரசு நிவாரணமாக வழங்குவதோடு, தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கி அவர்களது குடும்பத்தை பாதுகாக்க முன்வர வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: தந்தை - மகன் இறந்த வழக்கில் டிஜிபி, எஸ்பி ஆஜராக உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.