ETV Bharat / state

மாபெரும் உண்ணாவிரத போராட்டம் - பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு

திருவாரூர்: மத்திய அரசின் மின்சார சீர்திருத்த மசோதாவை கைவிட வலியுறுத்தி தஞ்சாவூரில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என பி.ஆர். பாண்டியன் கூறியுள்ளார்.

பி.ஆர்.பாண்டியன்
பி.ஆர்.பாண்டியன்
author img

By

Published : May 20, 2020, 4:33 PM IST

மத்திய அரசின் 2020 மின்சார சீர்திருத்த மசோதாவை கைவிட வலியுறுத்தி வருகின்ற ஜூன் 5ஆம் தஞ்சாவூரில் மாநிலம் தழுவிய மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுமென அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் அறித்துள்ளார்.

இதுகுறித்து மன்னார்குடியில் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது;

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 2020 மின்சார சீர்திருத்த வரைவு மசோதா மக்கள் நலனுக்கு எதிரானது. மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் நோக்கம் கொண்டது. தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு திட்டமிட்டு கொண்டு வரப்படுகிறது. 100 யூனிட் வரை பொதுமக்களுக்கு வழங்கப்படும் மின் கட்டண சலுகைகளையும் அபகரிக்கும் நோக்கமுடையது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநில அரசுகளை மக்களிடமிருந்து பிரிக்கும் அரசியல் பழிவாங்கும் செயல். கூட்டாட்சி தத்துவத்தை குழிதோண்டி புதைக்கும் வன்மம் கொண்டது. குறிப்பாக இந்திய அரசில் பொருளாதார வருவாயில் 35%க்கு மேல் ஈட்டி தருவது தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்கள்தான். அதற்கு அடிப்படை விவசாயம்தான். விவசாய உற்பத்தி, சாலை மேம்பாடு, மின்சார வசதி, மருத்துவம், கல்வி உள்ளிட்ட அனைத்திலும் முதன்மை வகிப்பது தமிழ்நாடு. இதற்கு அடிப்படை திராவிடப் பாரம்பரியம் என்பதையும் யாரும் மறுக்க முடியாது.

உதாரணமாக கரோனா தொற்றால் தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் வட மாநிலங்களின் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையே சாட்சியாக அமைந்துள்ளது. எனவே மத்திய அரசு பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் அரசியல் பழிவாங்கும் படலமாக தமிழ்நாட்டை குறிவைத்தே அவசர சட்டங்கள் கொண்டு வரப்படுகிறது. தமிழ்நாடு வளர்ச்சியை வட மாநிலங்களோடு ஒப்பிடும்போது 25 ஆண்டுகள் முன்னோக்கி உள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுத்துவிடலாம் என முயற்சிக்கிறது.

இதனை எதிர்கொண்டு தமிழ்நாடு உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறும் வகையில் கொண்டு வரப்பட்ட உயரிய திட்டம்தான் விவசாயத்திற்கு இலவச மின்சார திட்டம். இதனை ரத்து செய்யும் உள்நோக்கத்தோடு மின் பயன்பாட்டிற்கான கட்டணத்தை விவசாயிகள் செலுத்திய பின் அதற்கான மானியத்தை பின்னேற்பு மானியமாக மாநில அரசுகளுக்கு வழங்கும் என்ற வகையில் மின்சார சீர்திருத்தம் என்ற பேரில் மத்திய அரசு 2020 மின்சார சீர்திருத்த சட்டத்தை கொண்டு வருவதை தமிழ்நாடு அரசு ஏற்கக்கூடாது.

இதனை கைவிட வலியுறுத்தி முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளதை வரவேற்கிறோம். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் உடனடியாக அவசரமாக தமிழ்நாடு மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களோடு கூட்டத்தை நடத்தி எதிர்ப்பையும், கண்டனத்தையும் மத்திய அரசுக்கு தெரிவிப்பதோடு, மக்களவை கூட்டத்தொடரிலும் இம்மசோதாவை முறியடிக்க முன்வர வேண்டும்.

இதனை கருத்தில் கொண்டு இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் உள்நோக்கம் கொண்ட மத்திய அரசின் வரைவு மசோதாவிற்கு எதிராக ஜூன் 5ஆம் தேதி தஞ்சாவூர் ரயிலடியில் மாநிலம் தழுவிய அளவில் முன்னணி நிர்வாகிகள், விவசாயிகள் பங்கேற்கும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் முதல்கட்டமாக நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க: ரயில் சேவை தொடக்கம்: ஜூன் 1ஆம் தேதி முதல் நாள்தோறும் 200 ரயில்கள் இயங்கும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.