தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் மன்னார்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ எடியூரப்பா இன்று பிரதமர் மோடியைச் சந்தித்து மேகதாதுவில் அணை கட்டுவதற்கான வரைவு திட்ட அறிக்கைக்கு அனுமதியளிக்க வலியுறுத்த உள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இன்று இரவு கர்நாடக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவசர கூட்டத்தை டெல்லியில் கூட்டி மேகதாது அணை குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது மிகப்பெரும் சதித் திட்டமாகும்.
காஷ்மீர் பிரச்னையில் அனைவரின் கவனத்தையும் திசைதிருப்பி விட்டு மறைமுகமாக மேகதாதுவில் அணை கட்டுவதற்குப் பிரதமரே பின்புலமாக இருந்து அனுமதி கொடுக்கும் மிகப் பெரும் சதித் திட்டத்தில் ஈடுபடுகிறாரோ?, என்ற சந்தேகம் வலுக்கிறது. மேகதாது அணை கட்ட அனுமதித்தால் தமிழ்நாடு அழிந்து போகும். எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் நமது நாடாளுமன்ற உறுப்பினர்களோடு பிரதமரைச் சந்தித்து மேகதாது அணை கட்டுவதற்கு மேற்கொள்ளும் சதித் திட்டத்தைத் தடுத்து நிறுத்த அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.”, என்றார்.