திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் மிலாடி நபியையொட்டி அரசு மதுபானக் கடைகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டவுன் பகுதியில் மதுபாட்டில்கள் கள்ளத்தனமாக விற்பனைக்காக கொண்டு செல்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையம் பகுதியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த மினி வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது வேனில் மதுப்பாட்டில்கள் கடத்தப்படுவது தெரியவந்தது. வேனுடன், 570 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த காவல் துறையினர், ஓட்டுநரை பிடித்து விசாரித்ததில் அதே பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் (30 ) என்பது தெரியவந்தது. பின்னர் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 'ரூ.10லட்சம் மதிப்புள்ள பாண்டிச்சேரி மதுபாட்டில்கள் பறிமுதல்'