தமிழ்நாடு அரசு ஒரு முறை உபயோகப்படுத்தப்படும் நெகிழிப் பொருட்களுக்கு தடை விதித்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி அளவில் நெகிழி பயன்பாடு தவிர்க்க வேண்டும், ஒரு முறை பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருள்களை உபயோகிக்கக் கூடாது, அவற்றுக்கான மாற்றுப் பொருட்களை பள்ளி மாணவ மாணவிகள் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பள்ளி ஆசிரியர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கம், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.
இதில், பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு விதித்துள்ள நெகிழிப் பொருட்கள் மீதான தடை குறித்தும், நெகிழிகளால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைக்கும் விதமாக ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
மேலும், நெகிழிப் பொருட்களுக்கு மாற்றாக கரும்பு சக்கையில் இருந்து செய்யப்பட்ட தட்டுகள், பேப்பர்களை கொண்டுச் செய்யப்பட்ட பைகள், பாக்கு மட்டைகள், மண் குவளைகள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
இதையும் படிங்க: மேம்பாலம் கட்டடத்தின் மேலிருந்து கொட்டும் தண்ணீரில் சினிமா பாட்டு!