ETV Bharat / state

ரேஷன் அட்டையில் தவறுதலாக பெயர் நீக்கம்; ஆட்டோ ஓட்டுனர் புகார்

author img

By

Published : Sep 10, 2020, 4:43 PM IST

திருவாரூர்: தன்னுடைய தந்தை பெயரை நீக்குவதற்கு பதிலாக தன்னுடைய பெயரை நீக்கிவிட்டார்கள் என ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

என்னுடைய தந்தை பெயரை நீக்குவதற்கு பதிலாக என்னுடைய பெயரை நீக்கிவிட்டார்கள் ஆட்டோ தொழிலாளர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் தன்னுடைய தந்தை பெயரை நீக்குவதற்கு பதிலாக தன்னுடைய பெயரை நீக்கி விட்டதாக கூறி மாவட்ட ஆட்சியர் ஆனந்திடம் கோரிக்கை மனு ஓன்றை அளித்தார்.

அந்த மனுவில், என்னுடைய தந்தையார் கணேசன் (85) கடந்தாண்டு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். அவரின் பெயரை குடும்ப அட்டையில் இருந்து நீக்கம் செய்வதற்காக திருவாரூர் நகராட்சியில் உள்ள இ-சேவை மையத்தில் பதிவு செய்திருந்தேன்.

இந்நிலையில் இ சேவை மையத்தில் இருந்த அலுவலர்கள் எனது தந்தையார் கணேசனின் பெயரை நீக்கம் செய்வதற்கு பதிலாக என்னுடைய பெயரான ஜி.பழனிவேலை நீக்கம் செய்து விட்டார்கள்.

இதனால் எனது தந்தை பெயரான கணேசனை நீக்கம் செய்துவிட்டு எனது பெயரான பழனிவேல் என்பதை குடும்ப அட்டையில் இணைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.