ETV Bharat / state

செல்ஃபோன் டவர் அமைப்பதற்கு எதிராக மக்கள் போராட்டம் - திருவாரூர் செய்திகள்

திருவாரூர்: குடியிருப்பு பகுதியில் செல்ஃபோன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

People protest against cell phone tower installation
author img

By

Published : Nov 6, 2019, 10:19 PM IST

திருவாரூர் நகர பகுதிக்குட்பட்ட ஸ்ரீதேவி நகரில் செல்ஃபோன் டவர் அமைப்பதற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்டது. குடியிருப்பு அருகில் செல்ஃபோன் டவர் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இந்த நிலையில் செல்ஃபோன் டவர் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர் செல்ஃபோன் டவருக்காக தோண்டப்பட்ட பள்ளத்திற்கு அருகில் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், செல்ஃபோன் டவர் அமைக்கும் இடமானது அப்பகுதியில் குடியிருக்கும் மருத்துவர் புவனேஸ்வரி என்பவருக்கு சொந்தமான நிலம், அவரிடம் குடியிருப்பு இடையே டவர் அமைப்பதால் பாதிப்பு ஏற்படும் என்று கேட்டுக்கொண்டோம். அதற்கு அவரும் டவர் அமைக்கவில்லை என ஒப்புக்கொண்டார். ஆனால் தற்போது டவர் அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. எனவே மாவட்ட ஆட்சியர் தலையிட்டு இப்பணியை நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

Intro:

Body:திருவாரூர் அருகே குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் பணி இடத்தை முற்றுகையிட்டு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டம் நகர் பகுதிக்குட்பட்ட ஸ்ரீதேவி நகரில் செல்போன் கோபுரம் அமைப்பதற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்டது. குடியிருப்பு அருகில் செல்போன் கோபுரம் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இந்த நிலையில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி துவங்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர் செல்போன் கோபுரத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்திற்கு அருகில் திடீர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதி மக்கள் கூறுகையில், செல்போன் கோபுரம் அமைக்கும் இடமானது அப்பகுதியில் குடியிருக்கும் மருத்துவர் புவனேஸ்வரி என்பவருக்கு சொந்தமான நிலம் அவரிடம் குடியிருப்பு இடையே கோபுரம் அமைப்பதால் பாதிப்பு ஏற்படும் என்று கேட்டுக்கொண்டதாகவும் அதற்கு அவரும் ஒப்புக்கொண்டதாகவும் ஆனால் தற்போது பணியானது நடைபெற்று வருகிறது. எனவே மாவட்ட ஆட்சியர் தலையிட்டு இப்பணியை நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.