ETV Bharat / state

'வீட்டுமனை பட்டா வேணும்' 150க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு! - tamil news

திருவாரூர்: வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி 150க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மனு
மனு
author img

By

Published : Feb 25, 2020, 1:16 PM IST

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் திருவாரூரில் கோட்டூர் பகுதியைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் ஆனந்த்திடம் மனு அளித்தனர்.

வீட்டுமனை பட்டா வழங்க கோரி மனு

அந்த மனுவில், "அருள்மிகு கொழுந்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் வசித்துவருகிறோம். இதனால் அரசின் சலுகைகள், இலவச வீடு, புதிதாக கட்டப்படும் வீடுகளுக்கு மின் இணைப்பு போன்றவற்றை பெற முடிவதில்லை. எனவே மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அரசும் தலையிட்டு எங்களுக்குத் தேவையான உதவிகளையும், சம்பந்தப்பட்ட சான்றிதழ்களையும் கிராம நிர்வாக அலுவலர் மூலம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: வெங்காயத்துக்கு இப்போவும் குறையாத மவுசு - 200 கிலோ சின்ன வெங்காயம் திருட்டு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.