திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள ஆலங்குளம் கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். இப்பகுதி மக்கள் சாலை வசதி வேண்டி பல போராட்டங்கள் நடத்தியும் மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. இதன் காரணமாக கடந்த 15 வருடங்களுக்கு முன்பு அவர்கள் அனைவரும் சேர்ந்து பணம் திரட்டி வயல்களின் வரப்புகளில் இரண்டு கிலோமீட்டர் தூரம் சாலை போட்டு பயன்படுத்திவந்தனர். பின்னர் மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு அதே சாலையில் ஜல்லிக்கற்கள் போட்டு தார்ச் சாலையாக மாற்றயமைத்துக் கொடுத்தது.
தற்போது அந்தச் சாலையானது மோசமான நிலையில் உள்ளது. குழந்தைகளையும் முதியவர்களையும் அத்தியாவசியத் தேவைகளுக்கு வெளியே அழைத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முக்கிய தேவை என்றாலும் ஆட்டோ மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் கூட கிராமத்திற்கு வர தயங்குகின்றனர்.
இதையும் படிங்க: 'எங்களுக்கு ஆன்லைன் என்றால் என்னவென்றே தெரியாது' - டிஜிட்டல் முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகள்