திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சுயதொழில் செய்யும் நபர்களுக்கு ஓய்வுதிய விழிப்புணர்வு மற்றும் சிறப்பு பதிவு முகாமினை தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது,
சர்க்கரை குடும்ப அட்டைகளை, அரிசி குடும்ப அட்டை மாற்றுவதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் வழியாகவும், நேரடியாகவும் பெறப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள குடும்ப அட்டைகளில் இருந்து தற்போது மாற்றுவதற்கான மனுக்கள் கணக்கிடப்பட்டு அவைகள் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
உள்ளாட்சி தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவு எடுக்க வேண்டும். தேர்தலுக்கான அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் விரைவில் தேர்தல் தேதியை விரைவில் அறிவிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. தேர்தல் எப்போது வந்தாலும் அதை எதிர்கொள்வதற்கு அதிமுக முழுபலத்தோடு உள்ளது. தேர்தல் தள்ளி போகவேண்டும் என்று திமுக தான் நீதிமன்றம் வரை சென்றுள்ளது என தெரிவித்தார்.
இதையும் படிக்க: ஏமன் நாட்டுப் படகில் தப்பிய தமிழர்கள்! என்ன நடந்தது?