ETV Bharat / state

13ஆவது தேசிய நெல் திருவிழா!

திருவாரூர்: திருத்துறைப்பூண்டியில் 13ஆவது தேசிய நெல் திருவிழா இரண்டாவது நாளாக இன்று தொடங்கியது. இதில் பாரம்பரிய உணவுகளான கூழ், நவதானிய அடை, துாதுவளை ரொட்டி போன்ற உணவுகள் இடம்பெற்றிருந்தன.

PADDY FESTIVAL
author img

By

Published : Jun 10, 2019, 1:49 PM IST

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தனியார் திருமண மண்டபத்தில் 13ஆம் ஆண்டு தேசிய அளவிலான நெல் திருவிழா நேற்று (ஜூன் 9) தொடங்கியது. இந்தத் திருவிழாவில் ஒடிசா, ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர்.

விழாவில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுப்பது, குறைந்த அளவு நீரினால் நெல் சாகுபடி செய்வது, சந்தைவாய்ப்பு ஏற்படுத்துவது குறித்த தகவல்கள், பாரம்பாரிய நெல் சாகுபடியால் ஏற்படும் நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

13ஆவது தேசிய நெல் திருவிழா
இந்த நெல் திருவிழாவில் கண்காட்சி அமைக்கப்பட்டு 150-க்கும் மேற்பட்ட பாரம்பாரிய நெல் வகைகள், அரிசி வகைகள், விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் குறித்து வழிகாட்டும் கையேடுகள், இயற்கை உரங்கள், வைக்கப்பட்டிருந்தன. இந்தக் கண்காட்சிகளை விவசாயிகள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
திருவாரூர்
உணவுத் திருவிழா

இரண்டாவது நாளான இன்று நிகழ்ச்சியில் பாரம்பாரிய உணவு திருவிழா நடைபெற்றது. இதில் பாரம்பரிய உணவுகளான கம்பு, கேழ்வரகு நவதானியக் கூழ், கம்பு, கேழ்வரகு, திணை போன்ற அரிசிகளால் செய்யப்பட்ட கொழுக்கட்டைகள், நவதானிய வடைகள், அடைகள், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளினால் செய்யப்பட்ட சாம்பார், பாரம்பாரிய அரிசிகளால் வடிக்கப்பட்ட சோறு, தூதுவளை ரொட்டி, தூதுவளை ஜூஸ் போன்ற பாரம்பாரிய உணவு பொருள்களால் உணவுத்திருவிழா நடைபெற்றது.

திருவாரூர்
13ஆவது தேசிய நெல் திருவிழா
இதுபோன்ற நிகழ்ச்சிகள் தமிழ்நாடு முழுவதும் அதிக அளவில் நடத்தப்பட வேண்டும் எனவும், மக்களுக்கு அவசியமான இது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற அரசு ஊக்குவிக்க வேண்டும் அல்லது அரசே இந்தத் திருவிழாவை ஏற்று நடத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனார்.

Intro:

Body:script - Mail

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.