ETV Bharat / state

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை - நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க விவசாயிகள் கோரிக்கை

திருவாரூர்: நன்னிலம் அருகேயுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க கோரிக்கை

author img

By

Published : Aug 12, 2020, 5:36 PM IST

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள பேரளம் பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் குறுவை சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில், அறுவடை பணிகள் முடிந்து நெல் மூட்டைகளை விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அடைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என்ற நம்பிக்கையில் 10 நாட்களுக்கும் மேலாக நெல் மூட்டைகளை அடுக்கி வைத்து காத்திருக்கின்றனர்.

இது குறித்து அந்தப் பகுதி விவசாயிகள் கூறியதாவது, "பல்வேறு இடற்பாடுகளை தாண்டி குறுவை சாகுபடியில் ஈடுபட்டு வருகிறோம். அறுவடை பணிகள் முடிந்து நெல் மூட்டைகளை நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு விற்பனைக்காக கொண்டுவந்துள்ளோம். 10 நாட்களுக்கும் மேலாக நெல் மூட்டைகளை அடுக்கி வைத்து காத்திருக்கின்றோம்.

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க கோரிக்கை

இதனால் நெற்பயிர்கள் எடை குறைந்து வருகிறது. எனவே, நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும். தனியார் வியாபாரிகளிடம் விற்பனை செய்தால் மூட்டைக்கு 850 முதல் அதற்கு குறைவாகவே விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. இந்த விலை தங்களுக்கு கட்டுப்படி ஆகவில்லை. எனவே, மாவட்ட ஆட்சியர் உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: கொல்லுமாங்குடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.